Kanyakumari
அண்டமே அவிழ்ந்ததேனோ..
அரி உதித்ததேனோ..
அலையே கொதித்ததேனோ..
அன்னமே பறந்ததேனோ..
அறிவே பெயர்த்ததேனோ..
அன்பே பிழைத்ததேனோ..
அவள் பிறந்ததேனோ..
அழகே என் புவிதானோ..
அமுதே என் தமிழ்தானோ..

செல்லோடு செல்லாக

கண் முன்னே நீயே நிற்கிறாய்..
கைய்யோடு கைய்யாக நீயே தவழ்கிறாய்..
பேசும் ஊமையானோம் உன்னால்..
தலை கவிழ்ந்தோம் தன்னால்..
கைக்கு அடக்கமான நட்பே..
உலகும் நீயாக.. எதற்கும் நீயாக..
இதெல்லாம் ஆகாதோ பொய்யாக..!!
நீ இல்லை எனில்
தேவையில்லா தேவைகளை தவிர்ப்போம் தானாக!!
கை கோர்ப்போம் ஒன்றாக!!
வாழ்வோம் அழகாக!!

https://www.thesocialdilemma.com/
The Social Dilemma on Netflix

வான் பறப்போம் வா..!!

Kolukkumalai, Munnar
நீயின்றி என் பயணம் முடிவதற்கில்லை..!!
நீயில்லையினும் சிறகை விறிக்க மறப்பதற்கில்லை..!!
ஒருவேளை உனை தேடித்தான் பறக்கிறேனோ?
இல்லை இயற்கையோடு துறக்கிறேனோ..!!
தெரியவில்லை கண்ணே...!!
இயற்கையின் பொன்னே....!!
நீ உலகில் இல்லையெனினும்
உனைத்தேடி வருவேனே.!!
🎭

“இதோ..

...கண்டேனடி..
உனை கண்ட நொடிகள்...
கொண்டேனடி..
உனது இரு இன்பங்கள்...
வைத்தேனடி..
என்னுயிர் உன் இமைகளில்...
பெற்றேனடி..
என் வாழ்வின் உச்சங்களை...
பறந்தேனடி..
உன்னுடன் உலகை தாண்டி..."
இதோ வந்தேனடி..
இதைப்பாட உன்னிடம் என் தமிழுடன்..!!

என்..

Kanyakumari, India
என் புவி..!!
இன்றும் புதிதாக
என்றும் புதிராக
என் கவி..!!
தமிழின் அமுதாக
பெண்ணின் கண்ணாக
என் உடல்..!!
உயிரின் நட்பாக
உணர்வின் உலகாக
என் கடல்..!!
நட்பின் அளவாக
தேடலின் உளவாக
என் உயிர்..!!
அன்பின் அலையாக
பிறப்பின் இறப்பாக....

புதிய காலம்

காலங்கள் பல கடந்ததுண்டு
ஆனால் இது எந்த காலம்??
கழிந்த காலங்களை எண்ணி
நேரம் கழிக்கவா..இல்லை வரும்
காலங்களை எண்ணி வருத்தப்படவா?
இரண்டும் இல்லை..
இது நம்மோடு உலகையும் சேர்த்து உணரும் காலம்..
வாழ்வின் பல குறில் நெடில்களை
கண்டிருக்கிறோம்..
இந்த காலமோ இதுவே முதல் முறை நம்முடன்
இனி பல முறை நம் எதிர்கால வாழ்வுடன்..
இக்காலத்தில் தான் பல வினாக்கள் நம்மை சுற்றி..
இனி விடை தேடும் காலமாக..
எங்கே தேடுவது என மீண்டும்
வினாக்கள்..கேள்விகள்..
கேள்..உன்னிடம் கேள்..
தேடு..உன்னோடு தேடு..
உன் வாழ்வை சுற்றி தேடு..
விடைகள் கண்டு வியப்போம்..திகைப்போம்..
இனியாவது நன்மைகளை..நற்பண்புகளை விதைப்போம்..
ஒன்றாய் இணைவோம்..
உயிர்களை மதிப்போம்..
உலகை உணர்வோம்..

கண்ணோடு நீ..

கனம் கனம் உனை நினைத்து
தினம் தினம் தவிக்கிறேனே..
ரனம் ரனமாக மனம் உறைகிறது..
பலம் பலமாக நம் காதல் வலுக்கிறது..
தடம் தடமாக அலைகிறேனே
நிதம் நிதம் உன்னுடன் சேர..
விழி வழி காணாது..
இந்த கவியின் வலி கொண்டு திரிகிறேனே..
என் கண் முன் இல்லையெனினும்
என் கண்ணுக்குள் நூறு நிலவாய் தெரிந்தாயே..
விழிக்குள் உனை வைத்து வெளியில் தேடுகிறேனே நான்..
என் விழி தாண்டி வருவாயா!!
உன் விழிக்குள் நான் வாழ!!

இருளின்…

சட்டென்று ஜன்னல் வெளியில் நீ..
இரவின் நிழலாய் நீ..
இருளில் ஒளியாய் நீ..
தனியே என்ன செய்கிறாயோ?
கேட்பாரற்ற இடத்திலும் உன் பார்வை
பலர் மீது..பளிச்சென..
தனியே தவிப்பது உனக்கு பிடிக்குமோ?
தவிக்கும் போதும் பலர் தவிப்பிற்கு
ஆறுதலாய் தூவுகிறாயே ஒளியை..
மொழி அறியா மின்மினிக்கும்..
வழி அறியா வழிப்போக்கனுக்கும்..
தருகிறாயே நிம்மதி நிழலை..
உலகில் பல இருள் சூழ்ந்து கொண்டிருக்கிறது..
அங்கும் உன் ஒளி வீசக்கூடாதோ??
மனிதரின் ஒலியும் கூட தேவை அதற்கு..
விடியலை காண..
சரி அதை தனியே பாப்போம்..
இன்று
அந்த இரவின் பிடியில்
அமைதியின் ஆட்சியில்
உன்னோடு சாய்ந்து நிற்க ஆசை
உன் இரவின் ரகசியங்கள்
எனக்கும் கொஞ்சம் விளக்கு..
இன்றுமுதல் உன் பெயர் இனிதென
இருளின் "தெரு விளக்கு"..!!!

நட்பிற்கு..

கைவீசியும் வருவான்..
கைப்பேசியிலும் தொடர்வான்..
நையாண்டியோடும் வருவான்..
நம்பிக்கையும் தருவான்..
சிலநேரம் மட்டும் அல்ல
எந்நேரம் என் கையாகவும் வருவான்
நான் கையில்லாமல் இருந்தால்கூட..!!